TNPSC Thervupettagam

வேளாண் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள்

July 5 , 2019 1844 days 631 0
  • நிதி ஆயோக்கின் வேளாண் சந்தையிடல் மற்றும் விவசாயிகளுக்கு உகந்த சீர்திருத்தக் குறியீடு (AMMFRI - Agricultural Marketing and Farmer Friendly Reforms Index) என்ற பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலமும் அதற்கடுத்து இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இடம் பிடித்துள்ளன.
  • சந்தைச் சீர்திருத்தங்களை மிகவும் மோசமாக செயல்படுத்தியதன் காரணமாக இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 25-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தக் குறியீட்டில் வேளாண் சந்தையில் மாநிலங்கள் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களின் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • AMFFRI-யில் உள்ள ‘0’ என்ற மதிப்பானது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் எந்தவொரு சீர்திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் “100” என்ற மதிப்பானது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொண்டது என்பதையும் குறிக்கின்றன.
  • இந்தக் குறியீடு 2016 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்