TNPSC Thervupettagam

வேளாண் நிதிநிலை அறிக்கை 2024

February 22 , 2024 148 days 405 0
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட அடுத்த நாள் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மாநில வேளாண் வரவு செலவுத் திட்டத்தினை தாக்கல் செய்துள்ளார்.
  • முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப் படுத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.
  • இது மண்ணின் தரத்தை மேம்படுத்துவதையும், சமூகத்தின் நல்வாழ்விற்காக நிலையான மற்றும் வேதிப்பொருட்கள் இல்லாத வேளாண் நடைமுறைகளை நோக்கி நகர்வதையும் நோக்கமாகக் கொண்டது.
  • நெல் பயிர் உற்பத்தியில் இரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ‘ஒரு கிராமம், ஒரு பயிர்’ திட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவுவதற்காக வேண்டி கிராமங்களை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • எதிர்பாராத இயற்கைப் பேரழிவுகள் காரணமாக விவசாயிகள் எதிர்கொண்ட வருமான இழப்பிலிருந்து அவர்களை மீட்க உதவுவதற்காக, பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டு திட்டமும் இதில் அறிவிக்கப் பட்டுள்ளது.
  • வேளாண்மையினை முதன்மைத் தொழிலாக மேம்படுத்துவதில் பெரும் கவனம் செலுத்துவதன் மூலமும், நிகரச் சாகுபடி நிலப்பரப்பினை அதிகரிப்பதற்காக தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்றுவதன் மூலமும் ஒவ்வொரு கிராமத்தையும் தன்னிறைவு மிக்க மாதிரி கிராமங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் விழிப்புணர்வை பரப்புவதோடு, பருவ நிலை மாற்றத் தணிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கி காட்டுவதற்காக சிறப்பு பருவநிலை-திறன்மிகு கிராமங்கள் உருவாக்கப்படும்.
  • நகர்ப்புற நுகர்வோர்கள் தரமான வேளாண் உற்பத்திகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புப் பொருட்களை எளிதாக அணுகுவதற்கு வழிவகை செய்வதற்காக மாநில நிதியிலிருந்து  5 கோடி ரூபாய் செலவில் உழவர் சந்தைகள் போன்றே 100 உழவர் அங்காடிகள் நிறுவப்பட உள்ளன.
  • மாநில அரசானது, மாநில வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வங்கி கடன்களைப் பெறுவதன் மூலம் வேளாண் சார்ந்த வணிகத்தையும் நிறுவும் 100 பட்டதாரிகளுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கும்.
  • தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகளை நிறுவுவதற்கு மானியம் வழங்கப்பட உள்ளன.
  • வேம்பு மரங்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 10 லட்சம் வேப்பங் கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும்.
  • விவசாயத்திற்குப் போதுமான மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய, நடப்பு ஆண்டில் 50,000 மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • முக்கனி (மா, வாழைப்பழம், பலா) புதிய தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் முல்லைத் தோட்டங்கள் (கன்னியகுமரி), மருதம் பூங்கா (தஞ்சாவூர்), சூரியத் தோட்டம் (கன்னியாகுமரி), செம்பருத்தி நாற்றுப் பண்ணைத் தோட்டம் (செங்கல்பட்டு), மாநிலத் தோட்டக்கலைப் பண்ணை (தென்காசி) நிறுவப்பட உள்ளது.
  • தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஒரு இணைப்பை உருவாக்குவதற்காக, ‘தனியார் வேளாண் இயந்திரங்கள் தனிப் பயனாக்கப் பட்ட வாடகை சேவை கைபேசி செயலி’ உருவாக்கப்பட உள்ளது.
  • 10 வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெறப்பட உள்ளது.
  • வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் அடையாளம் காணப் பட்டு அவற்றின் நோக்கங்கள், நிலைப்புத் தன்மை மற்றும் வணிகத் திட்டங்களின் அடிப்படையில் மானியங்கள் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்