TNPSC Thervupettagam

வேளாண் பட்ஜெட் – முக்கிய நடவடிக்கைகள்

August 20 , 2021 1100 days 514 0
  • இயற்கை வேளாண்மைக்காக வேளாண் துறையின் கீழ் ஒரு தனிப் பிரிவு உருவாக்கப் படும்.
  • கிராமப்புற இளையோர் வேளாண் திறன் மேம்பாட்டுத் திட்டமானது’ செயல்படுத்தப் படும்.
  • இது கல்வி கற்ற இளைஞர்களை தங்களது சொந்த ஊர்களில் விவசாயத்தினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஊக்குவிக்கும்.
  • ஒருங்கிணைந்த வேளாண் அமைப்பானது செயல்படுத்தப்படும்.
  • இயற்கைப் பேரிடர்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக வேண்டி வேளாண் மண்டலக் குழுக்கள் அமைக்கப்படும்.
  • சென்னையில் வேளாண்மைக்கென தனி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • ஒட்டன்சத்திரம் மற்றும் பண்ரூட்டி ஆகிய இடங்களில் நவீன குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.
  • குன்னூர் மற்றும் கோத்தகிரி எல்லையில் அமைந்துள்ள எடப்பள்ளி கிராமத்தில் ஒருங்கிணைந்த கிராமப்புற வேளாண் சந்தை வளாகமானது அரசினால் அமைக்கப் படும்.
  • சென்னை மாநகராட்சியிலுள்ள கொளத்தூரில் ‘நவீன வேளாண் சந்தைப்படுத்துதல் மையமானது அமைக்கப்படும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள ஜீனூர் என்னுமிடத்தில் ஒரு புதிய தோட்டக் கலைக் கல்லூரியானது நிறுவப்படும்.
  • ஈரோடு அருகேயுள்ள பவானி சாகர் எனுமிடத்தில் மஞ்சள் ஆராய்ச்சி மையமானது நிறுவப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்