பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவானது பருத்தி, கரும்பு மற்றும் சணல் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வேண்டி பல நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இது கரும்புச் சாறிலிருந்துப் பிரித்தெடுக்கப்பட்ட எத்தனாலைப் பெட்ரோலுடன் கலப்பதை ஊக்குவிப்பதற்காக வேண்டி அதன் விலையை அதிகரித்துள்ளது.
மேலும் இது சரக்குப் பொதிகளில் சணல் பயன்பாட்டினைக் கட்டாயமாக்கும் பதிவு விதிகளுக்கு தனது ஒப்புதலை அளித்துள்ளது.
இந்த ஒப்புதலுடன் 100% உணவு தானியங்கள் மற்றும் 20% கரும்பு ஆகியவை சணல் பைகளில் அடைக்கப்பட வேண்டும்.
பெட்ரோலுடன் எத்தனாலைக் கலப்பது 2022 ஆம் ஆண்டிற்குள் 10% வரையும் 2024 ஆம் ஆண்டிற்குள் 20% வரையும் எட்டும் என இதன் மூலம் எதிர்பார்க்கப் படுகிறது.
எண்ணெய்ச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களானது சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளிடமிருந்து அரசு நிர்ணயித்த வீதத்திலேயே எத்தனாலைக் கொள் முதல் செய்கின்றன.
எத்தனால் கலப்புத் திட்டமானது கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்து இருப்பதைக் குறைத்துள்ளது.