TNPSC Thervupettagam

வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா

April 5 , 2023 602 days 338 0
  • மிகப் பெரும் ஒரு சாதிய எதிர்ப்புப் போராட்டமான வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவினை, கேரள மற்றும் தமிழக மாநில முதல்வர்கள் இணைந்துத் தொடங்கி வைத்தனர்.
  • ஈழவர்கள் மற்றும் புலையர்கள் போன்ற தாழ்த்தப்பட்டச் சாதியினர் தூய்மை அற்றவர்களாகக் கருதப்பட்ட நிலையில் உயர் சாதியினரிடமிருந்து அவர்களை விலக்கி வைப்பதற்காக பல்வேறு விதிகள் முன்னொரு காலத்தில் நடைமுறையில் இருந்தன.
  • கோவில் நுழைவு மட்டுமின்றி, கோவில்களைச் சுற்றியுள்ள சாலைகளில் நடக்கவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
  • 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற கோயில் நகரத்தில், அகிம்சை முறையிலான ஒரு போராட்டம் தொடங்கியது.
  • இது நாடு முழுவதும் "கோயில் நுழைவுப் போராட்ட இயக்கங்களின்" மாபெரும் தொடக்கத்திற்குக் காரணமாக இருந்தது.
  • ஸ்ரீ நாராயண குரு, சட்டாம்பி சுவாமி, T.K. மாதவன், அய்யன்காளி ஆகியோர் இந்தப் போராட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள் ஆவர்.
  • 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சத்தியாகிரகம் முடிந்து ஏறக்குறையப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் நுழைவுப் பிரகடனத்தில் திருவிதாங்கூர் மகாராஜா கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்