திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற கோயில் நகரில், 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று அகிம்சைப் போராட்டம் தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் விரைவில் பரவிய கோவில் நுழைவு இயக்கங்களில் இதுவே முதன்மை ஆனதாகும்.
சத்தியாகிரகம் ஆனது வளர்ந்து வரும் தேசியவாத இயக்கத்தின் மத்தியில் சமூகச் சீர்திருத்தத்தை முன்னிறுத்தி, காந்தியவாத எதிர்ப்பு முறைகளை திருவிதாங்கூர் மாகாணத்திற்குக் கொண்டு வந்தது.
வைக்கம் சத்தியாகிரகம் ஆனது 600 நாட்களுக்கு மேல் நீடித்தது.
ஈழவத் தலைவர் T. K. மாதவன் 1917 ஆம் ஆண்டில் தனது தேசாபிமானி இதழில் எழுதிய தலையங்கத்தில் கோயில் நுழைவுப் பிரச்சினை குறித்து முதலில் எழுதினார்.
1921 ஆம் ஆண்டில் காந்தியைச் சந்தித்த மாதவன், மாபெரும் அளவிலான கோயில் நுழைவுப் போராட்டத்திற்கு மகாத்மாவின் ஆதரவைப் பெற்றார்.
1923 ஆம் ஆண்டில் காக்கிநாடாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வில், தீண்டாமை ஒழிப்பினை ஒரு முக்கியப் பிரச்சினையாக மேற்கொள்வதற்கான ஒரு தீர்மானம் ஆனது கேரள மாகாண காங்கிரஸ் குழுவினால் நிறைவேற்றப்பட்டது.
1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திருவிதாங்கூர் மகாராஜா ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில் நுழைவுப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட நிலையில் இது அந்த மாகாணத்தின் கோவில்களில் விளிம்பு நிலை சாதியினர் நுழைவதற்கான பல வருட காலத் தடையை நீக்கியது.