TNPSC Thervupettagam

வைரஸ் கல்லீரல் அழற்சியின் கட்டுப்பாட்டிற்கான தேசிய திட்டம்

April 26 , 2018 2279 days 847 0
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது (ministry of health and family welfare) 2018-19 ஆம் நிதி ஆண்டிலிருந்து வைரஸ் கல்லீரல் அழற்சியின் கட்டுப்பாட்டிற்கான தேசிய திட்டத்தை (National Programme for Control of Viral Hepatitis) வெளியிட உள்ளது.
  • இதற்காக வேண்டி அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கு ரூ.600 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நாட்டில்2 கோடி மக்கள் ஹெபடைடிஸ்-சி (Hepatitis C) வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • ஹெபடைடிஸ்-சி வைரஸினால் உண்டாகும் கல்லீரல் அழற்சியை குணப்படுத்த எந்தவொரு அறியப்பட்ட தடுப்பூசியும் தற்போது இல்லை. ஹெபடைடிஸ்-பி ஆனது பாலுறவு தொடர்பு வழியாக பரவ வல்லது. ஆனால் ஹெபடைடிஸ்-சி பாலுறவு தொடர்பு வழியே பரவாது.
  • ஹெபடைடிஸ்-சி வைரஸானது கல்லீரலை பாதிக்கக்கூடிய இரத்தவழி பரவு வைரஸ் ஆகும். (blood-borne virus)
  • உட்செலுத்தக் கூடிய ஊசிகளின் பயன்பாடு, பாதுகாப்பற்ற ஊசி செலுத்துதல் நடைமுறைகள், பாதுகாப்பற்ற சுகாதார சிகிச்சை, பரிசோதிக்கப்படாத இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் பரிமாற்றம் ஆகியவற்றின் வழியே ஹெபடைடிஸ்-சி வைரஸ் பரவுகின்றது.
  • ஹெபடைடிஸ்-சி வைரஸிற்கான உலக சுகாதார மையத்தின் புதிய சிகிச்சை வழிகாட்டுதல்களின் கீழ், ஹெபடைடிஸ்-சி வைரஸிற்கான மருந்துப் பொருளாக சோபோஸ்புவிர் (Sofosbuvir) எனும் மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வகையான ஹெபடைடிஸ்-சி நோயாளிகளுக்கும் ஹெபடைடிஸ்-சி (Hepatitis-C) என்ற கல்லீரல் அழற்சி நோய்க்கு வாய்வழியே உட்கொள்ளத்தக்க மருந்துகளைக் (Oral Medicine) கொண்டு சிகிச்சை அளிக்கவல்ல நாட்டின் முதல் மாநிலமாக ஹரியானா உருவாகியுள்ளது..
  • இதற்காக முதல் முறையாக ஹரியானா மாநிலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வாய்மொழியாக உட்கொள்ளும் ஹெபடைடிஸ்-சி நோய்க்கான மருந்துகளை அறிமுகம் செய்துள்ளது.
  • கல்லீரல் அழற்சி என்பது கல்லீரலில் உள்ள செல்கள் வீக்கத்துடன் காணப்படும் நிலை ஆகும். நோய் தொற்றின் வகையைப் பொறுத்து உடலில் உண்டாகும் சிக்கல்கள் வேறுபடும்.
  • ஹெபடைடிஸ் வகை வைரஸ்களால் இந்நோய் ஏற்படுகிறது.
  • ஒவ்வொரு கல்லீரல் அழற்சி வகை நோயும் வெவ்வேறு ஹெபடைடிஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. கல்லீரல் அழற்சி / ஹெபடைடிஸ் ஐந்து வகைப்படும். அவை,
    1. ஹெபடைடிஸ் – ஏ
    2. ஹெபடைடிஸ் - பி
    3. ஹெபடைடிஸ் - சி
    4. ஹெபடைடிஸ் – டி
    5. ஹெபடைடிஸ் - ஈ

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்