வைரஸ் கல்லீரல் அழற்சி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான ஒருங்கிணைந்த தொடக்கம்
April 29 , 2018 2405 days 714 0
வைரஸ் கல்லீரல் அழற்சியின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல வாழ்வு அமைச்சகமானது தேசிய சுகாதாரத் திட்டத்தின் (National Health Mission -NHM) கீழ் “வைரஸ் கல்லீரல் அழற்சியின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான ஒருங்கிணைந்த தொடக்கத்தை” (‘Integrated initiative for prevention & control of viral hepatitis’) தொடங்க முடிவு செய்துள்ளது.
கல்லீரல் அழற்சி என்பது கல்லீரல் வீக்கமாகும். கல்லீரல் அழற்சி என்பது பெரும்பாலும் வைரஸினால் ஏற்படுகின்றது. கல்லீரல் அழற்சியில் பொதுவாக 5 வகைகள் உள்ளன. அவையாவன ஹெப்படைடிஸ் A, ஹெப்படைடிஸ் B, ஹெப்படைடிஸ் C, ஹெப்படைடிஸ் D, ஹெப்படைடிஸ் E ஆகியவை ஆகும்.
வைரஸ் ஹெப்படைடிஸ் நோயானது உலகம் முழுவதும் ஓர் பொது சுகாதாரப் பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா 2030-ஆம் ஆண்டிற்குள் கல்லீரல் அழற்சியை முற்றிலும் ஒழிக்க இலக்கினை நிர்ணயித்துள்ளது.