TNPSC Thervupettagam
April 28 , 2021 1217 days 589 0
  • சமீபத்தில் இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகமானது (DCGI - Drug Controller General of India) “வைராஃபின்னைஎன்ற மருந்தினைப் பயன்படுத்தகட்டுப்பாடுகளுடன் கூடிய அவசரகாலப் பயன்பாட்டு ஒப்புதலைவழங்கியுள்ளது.
  • வைராஃபின் மருந்தானது ஹெப்படைட்டிஸ் B மற்றும் C போன்ற நோய்களுக்குச்  சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
  • தற்போது மிதமான கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்பட உள்ளது.
  • தொற்று ஏற்பட்ட ஆரம்ப நிலையிலேயே வைராஃபின்னின் முதல் தவணையை (Dose) வழங்குவது கோவிட்-19 நோயாளிகள் விரைவில் குணமடைய உதவும்.
  • ஆக்சிஜன் வழங்குவதற்கான தேவையை இது குறைக்க உதவும்.
  • வைராஃபின் மருந்து கோவிட்-19 நோயில் மிதமான தொற்றுகளிலிருந்து மீளும் காலத்தை மேம்படுத்துகிறது.
  • வைராஃபின்னில் சிகிச்சையளிக்கப்படும் 91.15% இளம்பருவ நோயாளிகள் ஏழு நாட்களில் RT-PCR சோதனையில் கோவிட் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளதாக சைடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • சைடஸ் நிறுவனமானது சைகோவ்-டி எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்