TNPSC Thervupettagam

வை-பை (Wi-Fi) விநியோக அமைப்பு - டிராய்

April 12 , 2018 2274 days 775 0
  • இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India - TRAI), இணையத்தின் செலவை 90 சதவிகிதம் குறைக்கும் வகையில் திறந்தவெளிக் கட்டமைப்பைக் கொண்ட வை-பை விநியோக அமைப்பு ஒன்றை உருவாக்க முன்மொழிவை அளித்துள்ளது.
  • இந்த முன்மொழியப்பட்ட திறந்தவெளிக் கட்டமைப்பு, இணையக் கட்டண விகிதங்களில் தற்போதைய நிலைமையில் இருந்து பத்தில் ஒரு பங்கு விலையைக் குறைத்திட உதவும்.
  • எண் முறை இந்தியா அல்லது டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்திற்கான அடிப்படைத் தேவை என்பது அகலக் கற்றை (பிராட்பேண்ட்) இணையதள சேவைகள் குறைந்த செலவில் கிடைப்பதாகும்.
  • எந்த ஒரு நிறுவனமோ, ஒழுங்குமுறைப் படுத்தப்படாத வியாபாரமோ, சங்கமோ எளிதில் ஒரு பொது வை-பை அணுகுமுனையை ஏற்படுத்திட வேண்டும் என டிராய் பரிந்துரைத்துள்ளது.
  • இந்த முறையின் கீழ்
    • மேகக் கணினி சேவைகளின் மூலம் கணக்குப் பதிவுகள், பணம் செலுத்துகைகள், சேவை தருபவர் மற்றும் சேவை வேண்டுவோர் ஆகியோரது அங்கீகாரம், ஒப்புதல் அளிக்கப்படுதல் ஆகியவை நிறைவேற்றப்படும்.
    • பயன்பாட்டாளர்கள் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளை பயன்படுத்துவது, ஒரே சொடுக்கில் பணம் செலுத்துவது மற்றும் எளிதில் கணினியை அணுகுவது ஆகியவற்றை செய்ய முடியும்.
  • நாடு முழுவதும் கிராமப் பஞ்சாயத்துகளில் வை-பை சேவைகளை ஏற்படுத்தத் திட்டமிட்டு, மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு கொண்டிருக்கும் பாரத் நெட் (Bharat Net) திட்டத்தை டிராயின் சமீபத்திய பரிந்துரைகள் மேற்கொண்டு இருக்கின்றன.
  • அரசு இந்த பாரத் நெட் திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவேற்றி உள்ளது. மேலும் 2019ம் ஆண்டிற்குள் இந்தத் திட்டம் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்