2017- வோன் ஹிப்பில் விருது புகழ்பெற்ற அறிவியலாளர் மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற பேராசிரியர்N.R ராவிற்கு வழங்கப்பட்டு உள்ளது.
இது அறிவியல் மூலப் பொருட்கள் (Scientific material) ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் வழங்கப்படும் உயரிய விருதாகும்.
N.R ராவ் இவ்விருதைப் பெறும் முதல் இந்தியர் மற்றும் ஆசியர் ஆவார்.
நானோ பொருட்களான கிராபின், மீள் கடத்தல் (Super Conductivity), 2D பொருட்கள், பெரும் மின்காந்த தடுப்பு (Magneto Resistance) ஆகிய விஷயங்கள் உட்பட பல புதுமையான பொருட்களின் செயல்பாட்டு மேம்பாட்டிற்கு அவர் அளித்த பல்திறன் திறமைகளின் பங்களிப்பின் பொருட்டு அவருக்கு இவ்விருது அமெரிக்காவின் போஸ்டன் நகரத்தில் இவ்வருடம் நவம்பர் மாதம் வழங்கப்பட இருக்கிறது.