TNPSC Thervupettagam

வோய்னிச் கையெழுத்துப் பிரதி

May 17 , 2019 1890 days 763 0
  • பிரிஸ்டோல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெரார்டு செசையர் என்பவர் வோய்னிச் கையெழுத்துப் பிரதியைப் படிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
  • இது வரலாற்றின் இடைக்காலத்தின் போது மத்தியத் தரைக் கடற்பகுதியில் பயன்படுத்தப்பட்ட முந்தைய ரோமானிய மொழி என்று இவர் கூறியுள்ளார்.
  • இது ஸ்பெயினின் அரகோன் இராணியின் மேற்கோளுக்கு ஒரு ஆதாரமாக டொமினிகன் கன்னியாஸ்திரிகளால் தொகுக்கப்பட்டது.
ஏன் இது தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது?
  • வோய்னிச் என்பது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழிந்து போன மொழியில் எழுதப்பட்ட ஒரு கையெழுத்துப் பிரதியாகும்.
  • இது உரைகள் மற்றும் விளக்கப் படங்களுடன் கெண்டைக் காலின் தோலின் (வெல்லும்) மீது எழுதப்பட்டதாகும்.
  • இரகசியக் குறியீட்டைக் கண்டுபிடிப்பவர்கள், மொழியியலாளர்கள் மற்றும் கணினி நிரல் எழுதுபவர்களால் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் கால அளவிற்கு இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்