வோஸ்டாக் ஆய்வு மையத்தில் தர்பூசணிகள் பயிரிடல்
August 5 , 2023
479 days
265
- அண்டார்டிகாவில் தர்பூசணிகளைப் பயிரிடுவதில் அறிவியலாளர்கள் ஒரு குறிப்பிடத் தக்கச் சாதனையினை எட்டியுள்ளனர்.
- இது துருவப் பகுதியில் அமைந்துள்ள வோஸ்டாக் ஆய்வு மையம் எனப்படும் ரஷ்ய ஆராய்ச்சி நிலையத்தில் பயிரிடப்பட்டுள்ளது.
- இந்த இடமானது பூமியில் உள்ள மிகவும் குளிரான இடமாக வகைப்படுத்தப் பட்டு உள்ளது.
- இங்கு வெப்பநிலையானது – 128.6 டிகிரி பாரன்ஹீட் (- 89.2 டிகிரி செல்சியஸ்) ஆக உள்ளது.
- தர்பூசணிகள் 4,300 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய சூடான் நாட்டில் தோன்றின.
- கொரிய அறிவியலாளர்கள் 2021 ஆம் ஆண்டில் மேற்கு அண்டார்டிகாவில் உள்ள கிங் செஜோங் நிலையத்தில் தர்பூசணி பயிரிட்டு சாதனை படைத்தனர்.
- அந்தத் தளத்தில் – 78.1 டிகிரி பாரன்ஹீட் (-25.6 டிகிரி செல்சியஸ்) என்ற வெப்பநிலை பதிவாகியது.
Post Views:
265