வ்ரோட்டனின் நீண்ட வால் கொண்ட வௌவால்
December 22 , 2024
31 days
81
- மொலோசஸ் எனும் வௌவால் வகையினைச் சேர்ந்த மிகவும் அரிதான வ்ரோட்டனின் நீண்ட வால் கொண்ட வௌவால் ஆனது டெல்லியில் தென்பட்டுள்ளது.
- இந்த வௌவால் இனமானது பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப் படுகிறது.
- மேகாலயாவின் ஜெயிந்தியா மலைக் குன்றுகளில் ஒரு சிறு கூட்டங்களாகவும், மேலும் கம்போடியாவில் தனி இனமாகவும் இது தென்பட்டுள்ளது.
- 2000 ஆம் ஆண்டு வரை, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரே ஒரு வௌவால் மட்டுமே இருந்ததன் காரணமாக இந்த இனம் மிக அருகி வரும் இனமாகக் கருதப்பட்டது.
- பின்னர் இந்த வௌவால் இனங்கள் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தரவுக் குறைபாடுகள் உள்ள இனமாகச் சேர்க்கப்பட்டது.
Post Views:
81