நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் கிழக்கு ஷான்டோங் மாகாணமான குயிங்டோவோ-வில்(Qingdao) 2018ஆம் ஆண்டிற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organization -SCO) மாநாட்டை சீனா நடத்த உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2018ஆம் ஆண்டிற்கான சுழற்சி வழியிலான தலைமையை (rotating chair) சீனா ஏற்றுள்ளது.
இதற்குமுன் 17வது ஷாங்காய் சர்வதேச அமைப்பின் மாநாடு 2017ல் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் (Astana) நடத்தப்பட்டது.
அமைப்பைப் பற்றி
சீனாவின் பெய்ஜிங்-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது யூரேஸியப் பிராந்தியத்தின் (Eurasian) ஓர் அரசியல் பொருளாதார, பாதுகாப்பு அமைப்பாகும்.
2001 ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது.
இதன் முழு நேர உறுப்பினர்களாவன
சீனா
இரஷ்யா
கஜகஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
தஜிகிஸ்தான்
கிர்கிஸ்தான்
இந்தியா
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகியவை நடப்பில் இந்த அமைப்பின் கூர்நோக்கு நாடுகளாக (Observer) உள்ளன.
கூர்நோக்கு நாடுகளாக இருந்து வந்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற SCO மாநாட்டில் முழு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது.
ஷாங்காய் ஐந்து (Shanghai Five) எனும் பெயரில் 1996 ஆம் ஆண்டு இரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை கொண்டு சீனா-வால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அஸ்தானா பிரகடனத்தின் மூலம் (Astana Declaration) மூலம் SCO ஓர் பிராந்தியப் பாதுகாப்பு (Regional Security Organization) அமைப்பாக உருவானது.
உறுப்பு நாடுகளிடையே இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதே (military cooperation) இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.