ஜம்மு காஷ்மீர் எல்லையை ஒட்டியவாறு பஞ்சாபில் வழியே பாயும் ராவி நதியின் மீது கட்டமைக்கப்படும் ஷாபுர்கண்டி அணையின் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப் பட்டுள்ளது.
55.5 மீட்டர் உயரமுள்ள இந்த அணை ஷாபுர்கண்டி பல்நோக்கு நதிப் பள்ளத்தாக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது 206 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இரண்டு நீர்மின் நிலையங்களையும் கொண்டுள்ளது.
பஞ்சாப் மாநில அரசினால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ராவி நதியின் அதிகப் படியான நீரைக் குறைக்க உதவும்.
சிந்து நதி கட்டமைப்பின் மூன்று கிழக்கு ஆறுகளில் ராவியும் ஒன்று ஆகும் என்பதோடு, அதன் நீர் ஆனது சிந்து நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் பங்கினைச் சாரும்.
ஷாபுர்கண்டி அணை, ராவி நதியின் மீது ரஞ்சித் சாகர் அணையின் தாழ்மட்டத்தில் 11 கி.மீ. தொலைவிலும், மாதோபூர் அணைக்கு மேல்மட்டத்தில் 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
ராவி நதி நீரை இந்தியா சிறப்பாகப் பயன்படுத்த இது உதவும்.