சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU - International Astronomical Union) ஆனது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் மற்றும் அதன் கிரகத்தின் புதியப் பெயர்களை அறிவித்துள்ளது.
‘எச்.ஐ.பி 7943’ நட்சத்திரத்திற்கு “ஷார்ஜா” என்றும் அதன் கிரகங்களில் ஒன்றுக்கு (வெளிக்கோள்) “பார்ஜீல்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான ஷார்ஜா நகரத்தின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் இந்த நட்சத்திரத்திற்கு “ஷார்ஜா” என்று பெயரிடப்பட்டது.
பார்ஜீல் என்பது ஒரு காற்றாலைக் கோபுரமாகும். காற்றாலைக் கோபுரமானது காற்றை காற்றுப் பதனமாக்க வடிவமாக மறுசுழற்சி செய்து காற்றின் ஓட்டத்தை வழிநடத்துகின்றது.