TNPSC Thervupettagam
October 14 , 2021 1012 days 577 0
  • குலாப் மற்றும் ஷாஹீன் ஆகிய புயல்கள் தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் கணிசமான சேதத்தை ஏற்படுத்திய வகையில் தொடர்ச்சியாக உருவான வெப்ப மண்டலப் புயல்களாகும்.
  • குலாப் புயலானது கிழக்கு இந்தியாவைத் தாக்கியது.
  • ஷாஹீன் புயலானது பாகிஸ்தான், ஈரான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைத் தாக்கியது.
  • 2021 ஆம் ஆண்டு வட இந்திய புயல் பருவத்தில் 3வது பெயரிடப்பட்ட புயல் குலாப் புயலாகும்.
  • வங்காள விரிகுடாவில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையிலிருந்து குலாப் புயல் தோன்றியது.
  • இந்தியாவின் ஆந்திரப் பிரதேசப் பகுதியில் குலாப் புயல் கரையைக் கடந்தது.
  • இந்தப் புயல் அமைப்பானது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து, அரபிக்கடலில் மையம் கொண்டது.
  • இந்தப் புயலமைப்பானது மீண்டும் ஒரு புயல் காற்றாக உருவெடுத்தது.
  • இந்திய வானியல் துறை இதற்கு ஷாஹீன் எனப் பெயரிட்டது.
  • ஓமன் வளைகுடாவை அடைந்த போது இப்புயல் மெல்ல மெல்ல வலுப் பெற்றது.
  • இப்புயலானது 1 ஆம் வகை புயலுக்குச் சமமாக ஓமனில் ஒரு அரிதான நிகழ்வாக கரையைக் கடந்தது.
  • பாகிஸ்தான் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் என்ற பெயருக்கு உருது/இந்தி மொழியில் ரோஜா என்று பொருள் ஆகும்.
  • கத்தார் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்ட ஷாஹீன் என்ற பெயருக்கு அரபு மொழியில் பருந்து (falcon) என்று பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்