TNPSC Thervupettagam

ஷி ஜின்பிங் - சீனா

November 5 , 2020 1395 days 604 0
  • ஆளும் சீன கம்யூனிசக் கட்சியின் முழு அமர்வானது 14வது ஐந்தாண்டுத் திட்டத்தின் (2021 - 2025) உருவாக்கத்திற்கான பரிந்துரையை ஏற்றுக் கொண்டது.
  • இது தேசியப் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு மற்றும் 2035 ஆம் ஆண்டிற்குள் நீண்ட காலக் குறிக்கோள்கள் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இந்தக் கட்சியானது 2035 ஆம் ஆண்டு வரை, அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஷி-ஜின்பிங் சீனாவின் அதிபராகத் தொடர ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தமானது சீன அதிபருக்கான 2 ஐந்து ஆண்டு கால பதவி வரம்பினை நீக்கியது.
  • இதற்கு முன்பு, இதற்கான அரசியலமைப்புத் திருத்தமானது (தடை) 1982 ஆம் ஆண்டில் டெங் ஜியோபிங் என்பவரால் மேற்கொள்ளப் பட்டது.
  • இது 2 முறையிலான பதவிக் காலத்திற்கு மேல் சீன அதிபராக ஒரு நபர் பதவியில் தொடர்வதைத் தடுக்கின்றது.
  • தற்போது சீன அதிபராக இருக்கும் இவருடைய பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டில் முடிவடைய இருக்கின்றது.
  • இவர் அதிபர் பதவியுடன் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகிய பொறுப்புகளையும் வகிக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்