பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் ஆனது தடையற்ற பயணத்திற்கான (போக்குவரத்திற்கான) ஐரோப்பாவின் ஷெங்கன் பகுதியில் பகுதியளவு அங்கத்தினராக இணைந்துள்ளன.
பகுதியளவு உறுப்பினர் அந்தஸ்து பெற்றுள்ள போதும், இந்த இரு நாடுகளின் வான்வழி மற்றும் கடல் வழி எல்லைகள் மீதான கட்டுப்பாடுகளை அந்நாடுகள் நீக்கியுள்ளன.
1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஷெங்கன் பகுதியானது, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் சுதந்திரமாகப் பயணிக்க அனுமதிக்கிறது.
இந்த இரு நாடுகள் பகுதியளவு உறுப்பினர்களாக இணைந்ததையடுத்து, ஷெங்கன் மண்டலம் ஆனது 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளில் சுமார் 25 மற்றும் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் உள்ளிட்ட சில நாடுகள் ஆகியவை உட்பட தற்போது 29 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.