TNPSC Thervupettagam

ஷெஞ்சன் பிராந்தியம் - பல்கேரியா மற்றும் ருமேனியா

December 17 , 2024 6 days 76 0
  • அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லையற்ற ஷெஞ்சன் மண்டலத்தின் முழு உறுப்பினர்களாக மாறுவதற்கு பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது.
  • பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய இரண்டு நாடுகளும் 2007 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக உள்ளன.
  • ஆனால், சட்ட விரோத குடியேற்றம் அதிகமாகும் என்ற அச்சத்தில், இந்த மண்டலத்தை விரிவுபடுத்துவதற்கு ஆஸ்திரியா எதிர்ப்பு தெரிவித்தது.
  • 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஷெஞ்சன் மண்டலமானது தற்போது 29 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த 27 உறுப்பினர் நாடுகளுள் 25 நாடுகளையும், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகியவற்றையும் உறுப்பினராகக் கொண்டுள்ளது.
  • உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாத உலகின் மிகப்பெரிய பகுதியான  இதில் சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த மண்டலத்திற்குள் சுதந்திரமாகப் பயணிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்