2016-ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் ஷ்ராம் விருதுகள் (Prime Minister’s Shram Awards) மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் இவ்விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
500 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் நிறுவனம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் துறைசார் நிறுவனம், மற்றும் பொதுத்துறை நிறுவனம் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நான்கு வெவ்வேறு வகைப்பிரிவின் கீழ் ஷ்ராம் விருதுகள் வழங்கப்படுகின்றன.
உற்பத்தி துறையில் (Field of productivity) பணிபுரியும் தொழிலாளர்களின் தனித்தன்மையுடைய பணிச் செயல்பாடு மற்றும் அளப்பறிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகின்றது.