மும்பையிலுள்ள அரசு கப்பல் கட்டுமான நிறுவனமான மசாகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பீன் நீர்மூழ்கிக்கப்பல் வகையைச் சேர்ந்த முதல் நீர்மூழ்கிக் கப்பலான “கல்வாரி” (Kalvari) கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பீனின் சிறப்பு அம்சங்கள்
குறைந்த கதிர்வீச்சுயுடைய இரைச்சல் அளவு (low radiated noise levels).
துல்லியமான வழிகாட்டு ஆயுதங்களை (Precision Guided Weapon) பயன்படுத்தி எதிரிகளின் மேல் முடக்கும் தாக்குதல் (crippling attack) நடத்தும் திறன்.
மேம்பட்ட அதிநவீன ஒலியியல் ஒடுத்தல் தொழில்நுட்பம் (Advanced Acoustic silencing techniques)
எதிரிகளின் கண்காணிப்பிலிருந்து புலப்படா நிலை (Stealth Features).