பெருநகர சென்னை காவல் துறையானது பின்வருவனவற்றிற்காக இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
சிசிடிவி கண்காணிப்பைச் செயல்படுத்துவதற்காக – பொது மக்கள் பங்களிப்புடன் இணைந்து ‘மூன்றாம் கண்’ என்ற ஒரு திட்டம்.
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எதிராக பணமில்லா முறையில் அபராதம் செலுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியதற்காக.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் ஸ்கோச் விருதுகளை சென்னை காவல் துறைக்கு வழங்கினார்.
இதுபற்றி
2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்கோச் நல்லாட்சி விருதானது ஒரு சுயாதீன அமைப்பால் வழங்கப் படுகின்றது.
இது தேசத்தின் முன்னேற்றத்திற்காக டிஜிட்டல், நிதி மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை அங்கீகரிக்கின்றது.