TNPSC Thervupettagam

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI)

June 28 , 2018 2216 days 779 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI-Stockholm International Peace Research Institute) மேம்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் படி, ஒன்பது அணு ஆயுத நாடுகளின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையானது 2017 தொடக்கத்தில் 14, 935 லிருந்து 2018 தொடக்கத்தில் 14, 465 ஆகக் குறைந்துள்ளது.

  • இந்த ஒன்பது நாடுகளாவன : அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா.
  • SIPRI என்பது சுயாதீன சிந்தனைச் சாவடி ஆகும். இது 1966 ஆண்டு முதல் திறந்த மூலங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களைத் தொகுக்கிறது.
  • உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 92% ரஷ்யா (6850 அணு ஆயுதங்கள்) மற்றும் அமெரிக்கா (6450 அணு ஆயுதங்கள்) ஆகிய நாடுகளிடம் உள்ளன.
  • இரு நாடுகளுக்கிடையேயான 2010ஆம் ஆண்டின் பாதுகாப்பு முக்கியத்துவமிக்க தாக்குதல் ஆயுதங்களின் மீதான கூடுதலான கட்டுப்பாடு மற்றும் குறைப்பிற்கான நடவடிக்கைகள் மீதான ஒப்பந்தத்தின் படி (New START Treaty) அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் ஆயுதக் கட்டுப்பாட்டு பொறுப்புகளின் காரணமாக இந்தக் குறைப்பு நிகழ்ந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்