TNPSC Thervupettagam
August 28 , 2022 695 days 391 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோம் தண்ணீர் பரிசிற்குப் பேராசிரியர் எமரிடஸ் வில்பிரட் புரூட்ஸேர்ட் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • சுற்றுச்சூழல் சார்ந்த ஆவியாதல் செயல்முறையினை மதிப்பிடுவதற்கான அவரது அற்புதமானப் பணிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஆவியாதல் மற்றும் நீரியல் பற்றிய அவரது புதுமையான ஆய்வுகள் ஆனது, குறிப்பாக பருவநிலை மாற்றத்தினைப் பொறுத்தவரையில் ஒரு நீடித்த தத்துவார்த்த மற்றும் ஒரு நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
  • மேலும், நிலத்தடி நீர்ச் சேமிப்பில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்குவதில் அவர் முன்னோடியாகத் திகழ்கிறார்.
  • ஸ்டாக்ஹோம் தண்ணீர் பரிசானது உலகின் மிகவும் மதிப்பு மிக்க தண்ணீர் விருது எனவும், பெரும்பாலும் தண்ணீருக்கான நோபல் பரிசு என்றும் விவரிக்கப்படுகிறது.
  • மதிப்புமிக்க இந்தப் பரிசானது 1991 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் தொடர்பான அசாதாரணமானச் சாதனைகளை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்