கருத்திற்கான ஆதாரம், முன்மாதிரி உருவாக்கம், உற்பத்திப் பொருள்களின் சோதனை, சந்தை நுழைவு, மற்றும் வணிகமயமாக்கல் போன்றவற்றினை மேற்கொள்ள தொடக்க நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஸ்டார்ட் அப் இந்தியா என்ற முன்னெடுப்புத் திட்டம் தொடங்கப்பட்ட ஐந்தாண்டு நிறைவின் போது நடத்தப்பட்ட “பிராரம்ப் : ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டின்” (Prarambh: StartupIndia International Summit) போது இத்திட்டம் அறிவிக்கப் பட்டது.
இத்திட்டம் முதன்மை நிதி வழங்குதல், புதுமைகளை ஆதரித்தல், மாற்றம் மிக்க புதிய யோசனைகளை ஆதரித்தல், அமலாக்கத்தினைச் செயல்படுத்துதல் மற்றும் தொடக்க நிறுவனம் சார்ந்த ஒரு புரட்சியைத் தொடங்க வழிவகை செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள உதவும்.
அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ. 945 கோடி தொகையினைப் பிரித்து வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தொடக்க நிறுவனங்களுக்கு உதவும் 300 ஊக்கப்படுத்து அமைப்புகள் (incubators) மூலம் சுமார் 3600 தொடக்க நிறுவனங்கள் இத்திட்டம் மூலம் ஆதரவளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஒப்புதலளிப்புத் துறை : தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையாகும்.