ஸ்டார்ட்-அப்களை பட்டியலிடுவதை கவர்ச்சிகரமாக்குவதற்காக சந்தை கட்டுப்பாட்டாளரான இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் நிபுணர் குழுவை ஆரம்பித்துள்ளது.
இக்குழு இந்திய நிறுவனங்கள் நேரடியாக அந்நிய சந்தைகளில் பட்டியலிடப்பட அனுமதியளிப்பதற்கும் வெளிநாடு நிறுவனங்கள் நேரடியாக இந்திய சந்தைகளில் பட்டியலிடப்பட அனுமதியளிப்பதற்கும் ஏதுவாக தகுந்த கட்டமைப்பை பரிந்துரைக்கும்.
தற்சமயம், இந்திய நிறுவனங்கள் வரவு களஞ்சியக வழிகள் (Depository receipts route) மூலமாக அதாவது உலகளாவிய வரவு களஞ்சியகம் (Global Depository receipts) அல்லது அமெரிக்க வரவு களஞ்சியகம் (American Depository receipts) வழிகளை மட்டுமே அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவதற்கு என்று உபயோகிக்க முடியும்.
அதே போல் அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்திய மூலதன சந்தைகளை அணுகிட இந்திய வரவுக் களஞ்சியகத்தை (Indian Depository Receipts) மட்டுமே உபயோகித்து பங்குகளை பட்டியலிட முடியும்.