TNPSC Thervupettagam

ஸ்டார்ட் அப் கலாச்சாரம்

January 6 , 2018 2544 days 833 0
  • இராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை வளர்க்கவும் அதனை மேம்படுத்தவும் இராஜஸ்தான் மாநில அரசு மற்றும் HDFC வங்கிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கூட்டிணைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், நடப்புக் கணக்குச் சேவை, கடன் அட்டைகள் போன்றவற்றோடு தொடர்புடைய இரு பயன்பாட்டாளருக்கு இடையேயான (end to end) தீர்வையும், இராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் ஸ்டார்ட் அப்-களின் செயல்பாடுகள் சார்ந்த தீர்வையும் HDFC வங்கி வழங்கும்.
  • HDFC வங்கியானது நாடு முழுவதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க உதவும் சூழலமைப்பை ஏற்படுத்துவதற்குப் பெரிதும் பங்காற்றி வருகின்றது.
  • மேலும் தன்னுடைய அனைத்து முக்கிய வங்கிக் கிளைகளிலும் அர்ப்பணிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் மண்டலங்களை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பையும் HDFC வங்கி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்