உலகளாவிய ஸ்டார்ட் – அப் சூழலின் ஒன்றுபட்ட அமைப்பான ஸ்டார்ட் – அப் – பிளிங்கின் அறிக்கைப்படி 2017 ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்டார்ட் – அப் சூழலில் 125 நாடுகளில், இந்தியா 37வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த அறிக்கை ஸ்டார்ட்அப் சூழலின் பலம் மற்றும் செயல்பாட்டை அளவிடும் ANSYS ஸ்டார்ட் அப் திட்டத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
இவ்வறிக்கையின் படி முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகள்
அமெரிக்கா (1)
இங்கிலாந்து (2)
கனடா (3)
இஸ்ரேல் (4)
ஜெர்மனி (5)
இவ்வறிக்கையில், ஆசியாவைப் பொறுத்தவரை சிங்கப்பூர் (10) முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து சீனா (12), தென்கொரியா (17) மற்றும் ஜப்பான் (21) ஆகியவை உள்ளன.
ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, தென் ஆப்பிரிக்கா (38) முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து கென்யா (53), எகிப்து (54) மற்றும் நைஜீரியா (57) ஆகியவை உள்ளன.
ஸ்டார்ட் அப்-ப்ளிங்க்
ஸ்டார்ட்-அப்-ப்ளிங்க் என்பது ஆயிரக்கணக்கான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப்கள், இணைந்து செயல்படும் நிறுவனங்கள் மற்றும் முடுக்கிகள் (Accelerators) ஆகியவற்றை ஒருங்கிணைத்த உலகளாவிய ஸ்டார்ட் – அப் சூழலின் ஒன்றுபட்ட அமைப்பாகும்.
இது, 125 நாடுகள் மற்றும் 900 நகரங்களைக் கணக்கில் கொண்டு உலகளாவிய தரவரிசைக் குறியீட்டையும் வெளியிடுகிறது. இக்குறியீடு அவைகளுடைய ஸ்டார்ட்அப் சூழலின் பலம் மற்றும் செயல்பாட்டை அளவிடுகிறது.
பல்வேறுபட்ட மூலங்களிலிருந்து (ஊக்கிகள், முடுக்கிகள் போன்றவை) எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இத்தரவுகள் ஸ்டார்ட்-அப் ப்ளிங்க் வழங்கும் உலகளாவிய சூழலமைவிலும் இடம் பெறும்.