TNPSC Thervupettagam

ஸ்டார்ட் அப்-ப்ளிங்க் அறிக்கை

April 8 , 2018 2424 days 797 0
  • உலகளாவிய ஸ்டார்ட் – அப் சூழலின் ஒன்றுபட்ட அமைப்பான ஸ்டார்ட் – அப் – பிளிங்கின் அறிக்கைப்படி 2017 ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்டார்ட் – அப் சூழலில் 125 நாடுகளில், இந்தியா 37வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த அறிக்கை ஸ்டார்ட்அப் சூழலின் பலம் மற்றும் செயல்பாட்டை அளவிடும் ANSYS ஸ்டார்ட் அப் திட்டத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
  • இவ்வறிக்கையின் படி முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகள்
    • அமெரிக்கா (1)
    • இங்கிலாந்து (2)
    • கனடா (3)
    • இஸ்ரேல் (4)
    • ஜெர்மனி (5)
  • இவ்வறிக்கையில், ஆசியாவைப் பொறுத்தவரை சிங்கப்பூர் (10) முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து சீனா (12), தென்கொரியா (17) மற்றும் ஜப்பான் (21) ஆகியவை உள்ளன.
  • ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, தென் ஆப்பிரிக்கா (38) முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து கென்யா (53), எகிப்து (54) மற்றும் நைஜீரியா (57) ஆகியவை உள்ளன.

ஸ்டார்ட் அப்-ப்ளிங்க்

  • ஸ்டார்ட்-அப்-ப்ளிங்க் என்பது ஆயிரக்கணக்கான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப்கள், இணைந்து செயல்படும் நிறுவனங்கள் மற்றும் முடுக்கிகள் (Accelerators) ஆகியவற்றை ஒருங்கிணைத்த உலகளாவிய ஸ்டார்ட் – அப் சூழலின் ஒன்றுபட்ட அமைப்பாகும்.
  • இது, 125 நாடுகள் மற்றும் 900 நகரங்களைக் கணக்கில் கொண்டு உலகளாவிய தரவரிசைக் குறியீட்டையும் வெளியிடுகிறது. இக்குறியீடு அவைகளுடைய ஸ்டார்ட்அப் சூழலின் பலம் மற்றும் செயல்பாட்டை அளவிடுகிறது.
  • பல்வேறுபட்ட மூலங்களிலிருந்து (ஊக்கிகள், முடுக்கிகள் போன்றவை) எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இத்தரவுகள் ஸ்டார்ட்-அப் ப்ளிங்க் வழங்கும் உலகளாவிய சூழலமைவிலும் இடம் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்