2027 ஆம் ஆண்டிற்குள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது அதிவேக இணையச் சேவைகளை வழங்குவதற்காக உலகம் முழுவதும் 42,000 செயற்கைக் கோள்களின் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனம் இந்த அமைப்பிற்கு "ஸ்டார்லிங்க் அமைப்பு" என்று பெயரிட்டுள்ளது. இது சமீபத்தில் 60 இணையச் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.
ஸ்டார்லிங்க் திட்டத்தின் காரணமாக, விண்வெளிக் குப்பைகள், செயற்கைக் கோள்களின் மோதல் மற்றும் விண்வெளிக்கான இணைப்பு துண்டிக்கப்படுதல் போன்ற கவலைகளும் எழுந்துள்ளன.