பதிவு செய்தலில் எளிமையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்ற திட்டத்தின் கீழ் ஸ்டார் 2.0 எனும் விரிவுபடுத்தப்பட்ட சேவைகளை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.
இது விரைவான, வெளிப்படையான மற்றும் எளிமையான பதிவு செயல்முறைகளை உறுதி செய்கிறது.
இது இடைத் தரகர்களையும் நீக்குகிறது.
இதன் மூலம் பட்டா மாற்றம் தொடர்பான ஆவணங்கள் பத்திரப் பதிவு முடிந்ததும் வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதனால் நேரம் சேமிக்கப்படுகின்றது.