ஸ்டாலினிசம் மற்றும் நாசிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐரோப்பிய நினைவு தினம் - ஆகஸ்ட் 23
August 25 , 2023 460 days 171 0
ஐரோப்பாவில் அமைதி மற்றும் உறுதித் தன்மையை வலுப்படுத்துவதற்காக ஜனநாயக மதிப்புகளை மேம்படுத்தும் போது, மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான நாடு கடத்தல் மற்றும் அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவைப் போற்றுவதே இந்த நினைவு நாளின் நோக்கமாகும்.
இந்த நாள் 2008 ஆம் ஆண்டில் ஐரோப்பியப் பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்டது.
1939 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் ரிப்பன்ட்ராப்-மொலோடோவ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தமானது ஹிட்லரின் தலைமையின் கீழான ஜெர்மனியையும் ஸ்டாலினின் தலைமையின் கீழான சோவியத் ஒன்றியத்தினையும் ஐரோப்பாவின் பெரும்பகுதியை பிரித்து ஆள வழி வகுத்தது.