TNPSC Thervupettagam
March 17 , 2018 2347 days 733 0
  • உலகப் புகழ்பெற்ற கோட்பாட்டியல் இயற்பியலாளர் (theoretical physicist) மற்றும் பிரபஞ்சவியலாளரான (cosmologist) ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன்னுடைய 76 வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
  • குணப்படுத்த முடியாத சிதைவு நோயான ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (amyotrophic lateral sclerosis-ALS) எனும் தசை உருக்கி நோயால் பாதிப்புற்றதால் உடல் இயக்கம் ஏதும் இன்றி  21-வது வயதில் ஹாக்கிங்ஸ் முடங்கினார்.
  • இந்நோய் Lou Gehrig’s நோய் என்றும்   அழைக்கப்படுகின்றது.
  • கருந்துளைகள் (Black holes) மற்றும் சார்பியல் (relativity) தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளால் உலகப் புகழ்பெற்ற ஸ்டீபன் ஹாக்கின்ஸ் உலகம் முழுவதும் அதிக விற்பனை செய்யப்பட்ட “காலத்தின் சுருக்கமான வரலாறு” (A Brief History of time) எனும் புத்தகம் உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • 1974, ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பான “இராயல் சொசைட்டியின்” மிகவும் இளைய உறுப்பினர்களில் (Fellow) ஒருவராக ஹாக்கிங்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1979-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதத்துக்கான “லூக்காஸியன் பேராசிரியர்” (Lucasian Professor of Mathematics) இருக்கைக்கு ஹாக்கிங்ஸ் நியமிக்கப்பட்டார்.
  • இவரது ஆரம்பகால வாழ்வு 2014 ஆம் ஆண்டு “The Theory of Everything” என்ற படத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்