TNPSC Thervupettagam

ஸ்டீராய்டு களிம்புகள் - தடை

April 16 , 2018 2418 days 717 0
  • ஸ்டீராய்டுகள் மற்றும் நுண்ணுயிர் கொல்லிகள் ஆகியவற்றைக் கொண்ட களிம்புகளின் பாகுபாடற்ற விற்பனையைத் தடுப்பதற்காக 14 ஸ்டீராய்டு மருந்துகளின் விற்பனையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தடை செய்துள்ளது.
  • இவற்றின் விற்பனையில் தடையை விதிக்க 1945 ஆம் ஆண்டின் மருந்துப் பொருட்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தின் அட்டவணை 4ல் இந்த 14 மருத்துவ தயாரிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • மருந்துப் பொருட்கள் தொழிற்நுட்ப ஆலோசனை ஆணையத்துடனான (Drugs Technical Advisory Board - DTAB) ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • மருத்துவ பரிந்துரையின்றி இத்தகு களிம்புகளின் விற்பனையைத் தடை செய்ய ஏற்கனவே DTAB பரிந்துரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • மேலும் இது தன் பரிந்துரைகளை மத்திய மருந்துப் பொருட்கள் தரநிலைக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் (Central Drugs Standards Control Organisation - CDSCO) சமர்ப்பித்துள்ளது.
  • சில தடை செய்யப்பட்ட களிம்புகளாவன.
    • பெகோமெதசோன்
    • டெசோனைட்
    • அல்குளோமெடசோன்
    • புளூவோசினோனைட்

மருந்துப் பொருட்கள் தொழிற்நுட்ப ஆலோசனை ஆணையம்

  • இந்தியாவில் மருத்துவப் பொருட்கள் தொடர்பான தொழிற்நுட்ப விவகாரங்கள் மீது முடிவுகளை எடுக்கும் உச்சபட்ச சட்ட ரீதியான அமைப்பே DTAB ஆகும்.
  • 1940 ஆம் ஆண்டின் மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தின் படி இது அமைக்கப்பட்டது.
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் CDSCO வின் ஒருபகுதியே DTAB ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்