இன்டர்போல் அமைப்பின் "ஸ்டோர்ம் மேக்கர்ஸ் II" என்ற நடவடிக்கையின் விளைவாக, பல்வேறு நாடுகளில் 281 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது மனிதக் கடத்தல், கடவுச் சீட்டு மோசடி, ஊழல், தொலைத்தொடர்பு மோசடி மற்றும் பாலியல் சுரண்டல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்ட 149 பேர் மீட்கப்பட்ட நிலையில், 360க்கும் மேற்பட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆசியா மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள 27 நாடுகளில் உள்ள சட்ட அமலாக்க முகவர்கள் இந்த நடவடிக்கைக்காக அணிதிரட்டப்பட்டனர்.
கடத்தப்பட்டவர்களை இணைய மோசடியில் ஈடுபடுவதற்கு என்று கட்டாயப்படுத்தும் நோக்கத்திற்காக வேண்டி மேற்கொள்ளப்பட்ட முதல் மனித கடத்தல் வழக்கினை தெலுங்கானா காவல்துறை பதிவு செய்தது.