TNPSC Thervupettagam

ஸ்ட்ரெப்டோகோகஸ் பியோஜெனெஸ் நோய்க்குறி கண்டறிவுக்கான டிஎன்ஏ உணர்கருவி (சென்சார்)

August 15 , 2017 2716 days 1016 0
  • சுமார் 30 நிமிடங்களில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவான ஸ்ட்ரெப்டோகோக்கஸ் பியோஜெனெசை கண்டறிவதற்காக  அல்ட்ராசென்சிடிவ் டிஎன்ஏ உணர் கருவி (Sensor), உருவாக்கப்பட்டுள்ளது.
  • டி.என்.ஏ. சிப்கள் எஸ்.பியோஜெனஸ்களை ( pyogenes) கண்டறிய பயன்படும் குறிப்பிடப்பட்ட சாதனமாகும்
  • வழக்கமான முறையான இனமறியும் முறை 18-24 மணிநேரம் வரை எடுத்துக்கொள்ளும் மற்றும் அடிப்படைக் கலாச்சார சோதனையானது எஸ்.பையோஜென்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு உதவாது.
  • மிதமான தோல் மற்றும் தொண்டை நோய்த்தொற்று முதல்   உயிருக்கு ஆபத்தான நச்சு நோய்களை ஏற்படுத்தும் எஸ்.பியோஜெனஸ் தொற்றுகள் ஒவ்வொரு வருடமும் 700 மில்லியன் மக்களை பாதிக்கின்றன.ஆரம்பக் காலகட்டத்திலேயே சிகிச்சையளிக்கப்படாவிட்டால், எஸ். பியோஜென்களின் மூலம், இதய நோய் (இதய வால்வுகள் சேதம்) ஏற்படலாம்.
  • CSIR- இன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மற்றும் நோயியல் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (NCDC) ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் இந்த சென்சார் உருவாக்கப்பட்டது
  • இதன் முடிவுகள் உயிரியல் பெருமூலக் கூறுகளுக்கான சர்வதேச பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன
  • டிஎன்ஏ சிப் அடிப்படையிலான இந்த சென்சார் கார்பன் எலெக்ட்ரோட் மற்றும் தங்க நானோ துகள்களுடன் உட்பொதிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்