பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தின் பேணுதலுக்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது (Ministry of Electronics and Information Technology - MEITY) ஸ்திரி ஸ்வபிமன் (Stree Swabhiman) எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இத்திட்டத்திற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள பொது சேவை மையங்களுடன் (Common Service Centre) கூட்டிணைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முழு பயனை ஈட்டுமளவு பொது சேவை மையங்களை செயல்படுத்துவதன் மூலம், ஊரக பகுதிகளின் வயது வந்த சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு மலிவான, நம்பத்தகு, நவீன, சுற்றுச்சூழலுக்கு உகந்த (Eco-friendly) சானிட்டரி நாப்கின்களின் அணுகலை வழங்கவல்ல நீடித்த மாதிரியை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் பெண்களிடையே சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வும், தாமே தொழில் தொடங்கி சானிட்டரி நாப்கின்களை தயாரித்து சந்தைப்படுத்தி வரும் பெண் தொழில் முனைவோர்கள், பிற பெண்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் (Personalised Outreach) நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்படும்.