மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் என்பவர் 53 கிலோ எடைப் பிரிவில் நெதர்லாந்தின் ஜெசிகா பிளாஸ்கா என்பவரை வீழ்த்தி, தனது முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
68 கிலோ எடைப் பிரிவில் திவ்யா காக்ரன் என்பவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தியா இத்தொடரில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இத்தொடரில் இரஷ்யா முதலிடத்தில் உள்ளது.