ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரமானது தொடர்மழையால் பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளது.
இந்த வெள்ளம் ஆனது டானா நிகழ்வால், அதாவது சூடான, ஈரமானக் காற்று குளிர்ந்த காற்றைச் சந்திக்கும் போது, நிலையற்ற வானிலை அமைப்பை உருவாக்குகின்ற ஒரு நிகழ்வால் ஏற்பட்டது.
போர்ச்சுகலில் 1967 ஆம் ஆண்டில் குறைந்தது சுமார் 500 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு, ஐரோப்பாவில் மிக மோசமான வெள்ளம் தொடர்பாக பதிவான பேரழிவு இதுவாகும்.
ஸ்பெயின் நாடானது 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நீடித்த வறட்சியை எதிர் கொண்ட பிறகு இந்தத் தீவிர வானிலை நிகழ்வு ஏற்பட்டுள்ளது.