இது ஸ்பேஸ்எக்ஸின் செவ்வாய்க் கிரக பயணத்திற்கான ஆளில்லா விண்கலத்தின் ஒரு முன்மாதிரியாகும்.
இது ஸ்டார்ஷிப் என்ற விண்கலத்தின் ஒரு பகுதி ஆ\கும்.
இந்த முன்மாதிரி விண்கலமானது தனது முதலாவது பயணச் சோதனையை சமீபத்தில் நிறைவு செய்தது.
இது பூமியின் சுற்றுவட்டப் பாதை, நிலவு மற்றும் செவ்வாய் ஆகியவற்றிற்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகளுக்கான மீண்டும் பயன்படுத்தக் கூடிய போக்குவரத்து அமைப்பாக செயல்படவுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் ஆனது ஸ்டார்ஷிப்பை “உலகின் மிகவும் வலிமையான ஏவு வாகனம்” என்று குறிப்பிடுகின்றது.