விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பிய முதலாவது தனியார் விண்வெளிக்கலன் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் ஆகும்.
ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி வீரர்கள் திட்டமானது விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு தொகுதியானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் (ISS - International Space Station) நுழைந்ததையடுத்து தனது முதலாவது பயணத்தை நிறைவு செய்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது டவுக் ஹர்லே மற்றும் பாப் பென்கென் ஆகியோரை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.
இந்த திட்டமானது ரஷ்யாவின் விண்வெளி ராக்கெட்டுகளை நாசா சார்ந்திருத்தலை முடிவுக்குக் கொண்டு வர இருக்கின்றது.
விண்வெளியிலிருந்து விண்வெளிக் கலன்களைப் பூமிக்கு மீண்டும் திருப்பிக் கொண்டு வந்த உலகின் முதலாவது தனியார் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் ஆகும்.
விண்வெளி வீரர்கள் “எண்டீவியர்” என்ற ஒரு ஓய்வு பெற்ற விண்கலன் ஒன்றின் நினைவாக இந்த வணிக ரீதியிலான விண்கலத்திற்கு அப்பெயரிட்டுள்ளனர்.
ISS என்பது தாழ் புவி வட்டப் பாதையில் நிலை கொண்டுள்ள ஒரு கூறுநிலை விண்வெளி நிலையமாகும். (வசிக்கத் தக்க நிலை கொண்ட ஒரு செயற்கையான செயற்கைக் கோள்)
விண்வெளியில் உள்ள மிகப்பெரிய செயற்கைப் பொருள் இதுவாகும். புவி தாழ் சுற்றுவட்டப் பாதையில் உள்ள மிகப்பெரிய செயற்கைக் கோள் இதுவாகும். இதை பூமியிலிருந்து வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்.
ISS ஆனது ஏறக்குறைய 93 நிமிடங்களில் பூமியைச் சுற்றி வருகின்றது. இது ஒரு நாளைக்கு 15.5 முறை பூமியைச் சுற்றி வருகின்றது.
ISS திட்டம் என்பது பின்வரும் 5 விண்வெளி நிறுவனங்களுக்கிடையேயான ஒரு தேசிய அளவிலான பலதரப்பு கூட்டுத் திட்டமாகும்.