TNPSC Thervupettagam

ஸ்பேஸ் எக்ஸின் முதலாவது அமெரிக்க இராணுவ செயற்கைக் கோள்

December 25 , 2018 2034 days 596 0
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கனவெரல் விமானப் படைத் தளத்திலிருந்து பால்கன் 9 விண்கலத்தின் மூலம் அமெரிக்க விமானப் படையின் புதிய ஜிபிஎஸ் III (GPS - Global Positioning System - புவியிடங்காட்டி) செயற்கைக் கோளை ஏவியுள்ளது.
  • நெடு நாட்களாக செயல்பட்டு வந்த 1997 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட GPS 2R என்ற விண்கலத்திற்கு மாற்றாக இந்த GPS 3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது.
  • “வெஸ்புக்கி” என்று அழைக்கப்படும் இந்த சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் விண்கலமானது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதலாவது அதிகாரப்பூர்வ “தேசியப் பாதுகாப்பு விண்வெளித்” திட்டமாகும்.
  • இது தற்பொழுது உள்ள அமைப்புகளைவிட மூன்று மடங்கு சிறந்த அளவில் துல்லியத் தன்மை கொண்ட தகவல்களை அளிக்கும். மேலும் இது எதிர் குறுக்கீட்டழித்தலில் எட்டு மடங்கு அளவிற்கு சிறந்த தகவல்களை அளிக்கும்.
  • “வெஸ்புக்கி” என்ற சிறப்புப் பெயர் கொண்ட இது அவரது பெயரால் வட மற்றும் தென் அமெரிக்காவிற்குப் பெயரிடப்பட்ட அமெரிகோ வெஸ்புக்கி என்ற இத்தாலியைச் சேர்ந்த வரைபட வல்லுநர் மற்றும் கள ஆய்வாளரைக் கௌரவிப்பதற்காக அதற்கு இப்பெயரிடப்பட்டது.
  • இது விமானப் படையின் பரிணாமம் பெற்ற விரிக்கத் தக்க செலுத்து வாகனத் திட்டத்துடன் ஒப்பிடத் தக்கது ஆகும்.
  • GPS III SVO1 திட்டத்தின் வெற்றியானது 2018 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸின் 21-வது மற்றும் 2018 ஆம் ஆண்டின் இறுதி ஏவுதலைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்