பாகிஸ்தானின் விமானப் படையானது தனது JF-17 தண்டர் போர் விமானத்திலிருந்து (JF-17 Thunder fighter jet) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் ஆயுதத்தினை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது பகல் மற்றும் இரவு நேரங்களில் மிகவும் துல்லியத் தன்மையுடன் பல்வேறு இலக்குகளின் மீது பயன்படுத்தப்படும் திறனை வழங்குகின்றது.
ஆயுதம் தயாரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் முழுவதும் உள்நாட்டு முயற்சிகளின் மூலமாகவே இந்த தகுதியை அடைந்துள்ள பாகிஸ்தானின் இந்த சோதனையானது ஒரு மிகப் பெரிய மைல்கல்லாகும்.