TNPSC Thervupettagam

ஸ்மார்ட் சுகாதார அட்டைகள் – ஒடிசா

August 20 , 2021 1102 days 548 0
  • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அம்மாநில மக்களுக்காக வேண்டி ஸ்மார்ட் சுகாதார அட்டைத் திட்டத்தினை அறிவித்தார்.
  • இத்திட்டமானது பிஜு ஸ்வஸ்திய கல்யாண் யோஜனா எனும் ஒரு திட்டத்தின் கீழ் அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, மாநிலத்தின் சுகாதாரச் சேவை  வழங்கீட்டு முறையை மாற்றியமைப்பது மட்டுமின்றி, நாட்டின் சுகாதாரத் துறையில் ஒரு வரலாற்றை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட் சுகாதார அட்டைகள் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சையினைப் பெற இயலும்.
  • ஒரு குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் இந்த அட்டை மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரையிலான பயன்களைப் பெற இயலும்.
  • மக்களுக்கு இவ்வகையிலான ஸ்மார்ட் சுகாதார அட்டைகளை வழங்கிய முதல் இந்திய மாநிலம் ஒடிசாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்