TNPSC Thervupettagam

ஸ்ரீரங்க ஆலயத்திற்கு யுனெஸ்கோ விருது

November 2 , 2017 2451 days 823 0
  • அரசு மற்றும் தனியார் கூட்டு ஒத்துழைப்பு (PPP) முறையின் கீழ் மாபெரும் புனரமைப்பு மற்றும் புத்துயிராக்க முயற்சியை மேற்கொண்டதற்காக ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி ஆலயத்திற்கு 2017ஆம் ஆண்டிற்கான கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பிற்கான யுனெஸ்கோ ஆசிய – பசுபிக் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஐ.நா. அவையின் ஓர் அமைப்பால் இத்தகு புகழ் பெற்ற விருது பெறும் தமிழகத்தின் முதல் ஆலயம் ஸ்ரீரங்கநாதசுவாமி ஆலயமாகும்.
  • புராதனங்கள் பாதுகாப்பு சார்ந்த 9 சர்வதேச வல்லுநர்கள் அடங்கிய நடுவர் குழுவால் ஆசிய – பசுபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பாரம்பரிய பாதுகாப்பு திட்டங்களின் மீதான பரிசீலனைக்குப் பிறகு அளிக்கப்படும் 4 விருதுகளுள் ஒன்று இந்த ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கலாச்சார பராம்பரிய பாதுகாப்பிற்கான யுனெஸ்கோவின் விருதுகள் 4 வகைப்பாட்டின் கீழ் வழங்கப்படுகின்றன.
  • இவற்றில் தமிழகத்தின் இந்த ஆலயத்துடன் புகழ்பெற்ற மும்பை கிறிஸ்துவ திருச்சபை, ராயல் பாம்பே ஒபேரா இல்லம் போன்ற இந்தியாவின் பிற  வரலாற்று புரதானச் சின்னங்கள்  யுனெஸ்கோவின் 4 வகையான விருதுகளில் ஒன்றான நடுவர் குழு மதிப்பீட்டு விருதை (Award of Merit) பெற்றுள்ளன.
கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பிற்கான யுனெஸ்கோ ஆசியபசுபிக் விருதுகள்
  • அரசு மற்றும் தனியார் கூட்டு ஒத்துழைப்பு முறையின் மூலம் அல்லது தனியார் துறையின் மூலம் ஆசிய-பசுபிக் பிராந்தியங்களில் உள்ள பாரம்பரிய சொத்துக்கள் மற்றும் கட்டிடங்களை வெற்றிகரமாக பாதுகாப்பதில் மேற்கொள்ளப்படும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இதற்கான விருது வழங்கும் யுனெஸ்கோ அலுவலகம் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் அமைந்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்