TNPSC Thervupettagam

ஸ்வச் சர்வேக்சன் விருதுகள் 2023

January 16 , 2024 186 days 232 0
  • குஜராத்தில் உள்ள சூரத் நகரம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் ஆகிய இரண்டும் நாட்டின் தூய்மையான நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்தூர் நகரம் தொடர்ந்து ஏழாவது முறையாக தூய்மையான நகரமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.
  • ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் விசாகப் பட்டினம், போபால், விஜயவாடா, புது டெல்லி, திருப்பதி, ஹைதராபாத் மற்றும் புனே ஆகியவை முதல் 10 தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • மாநிலங்கள் பிரிவில், மகாராஷ்டிரா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ஒடிசா மாநிலம் நான்காவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, சிக்கிம், கர்நாடகா, கோவா, ஹரியானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
  • ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், மகாராஷ்டிராவின் சாஸ்வத் & லோனாவாலா மற்றும் சத்தீஸ்கரின் படான் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் இராணுவக் குடியிருப்பு வாரியம் ஆனது தூய்மையான இராணுவக் குடியிருப்பு வாரியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ், தூய்மையான கங்கை நகரங்கள் பிரிவில் முதல் இரண்டு விருதுகளைப் பெற்றன.
  • சண்டிகர் சிறந்த சஃபைமித்ரா சுரக்சித் ஷெஹர் (துப்புரவுத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான நகரம்) விருதை வென்றது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான ஸ்வச் சர்வேக்சன் மதிப்பீட்டில் தூய்மையான உள்ளாட்சி அமைப்புப் பிரிவில், தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள கீழ்வேளூர் நகரப் பஞ்சாயத்து முதலிடம் பிடித்துள்ளது.
  • தென் மாநிலங்களுக்கான பட்டியலிலும் (தென் மண்டலம்) கீழ்வேளூர் தூய்மையான உள்ளாட்சி அமைப்பாக இடம் பெற்றுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு தூய்மைக் கணக்கெடுப்பின் கருத்துரு, “கழிவிலிருந்து வளத்தினை உருவாக்குதல்” என்றும், 2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்