குஜராத்தில் உள்ள சூரத் நகரம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் ஆகிய இரண்டும் நாட்டின் தூய்மையான நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தூர் நகரம் தொடர்ந்து ஏழாவது முறையாக தூய்மையான நகரமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் விசாகப் பட்டினம், போபால், விஜயவாடா, புது டெல்லி, திருப்பதி, ஹைதராபாத் மற்றும் புனே ஆகியவை முதல் 10 தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மாநிலங்கள் பிரிவில், மகாராஷ்டிரா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஒடிசா மாநிலம் நான்காவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, சிக்கிம், கர்நாடகா, கோவா, ஹரியானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், மகாராஷ்டிராவின் சாஸ்வத் & லோனாவாலா மற்றும் சத்தீஸ்கரின் படான் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் இராணுவக் குடியிருப்பு வாரியம் ஆனது தூய்மையான இராணுவக் குடியிருப்பு வாரியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ், தூய்மையான கங்கை நகரங்கள் பிரிவில் முதல் இரண்டு விருதுகளைப் பெற்றன.
சண்டிகர் சிறந்த சஃபைமித்ரா சுரக்சித் ஷெஹர் (துப்புரவுத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான நகரம்) விருதை வென்றது.
2023 ஆம் ஆண்டிற்கான ஸ்வச் சர்வேக்சன் மதிப்பீட்டில் தூய்மையான உள்ளாட்சி அமைப்புப் பிரிவில், தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள கீழ்வேளூர் நகரப் பஞ்சாயத்து முதலிடம் பிடித்துள்ளது.
தென் மாநிலங்களுக்கான பட்டியலிலும் (தென் மண்டலம்) கீழ்வேளூர் தூய்மையான உள்ளாட்சி அமைப்பாக இடம் பெற்றுள்ளது.
2023 ஆம் ஆண்டு தூய்மைக் கணக்கெடுப்பின் கருத்துரு, “கழிவிலிருந்து வளத்தினை உருவாக்குதல்” என்றும், 2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி” என்பதாகும்.