TNPSC Thervupettagam

ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன் 2019 விருது

November 21 , 2019 1712 days 647 0
  • மத்திய ஜல் சக்தி அமைச்சர்  கஜேந்திர சிங் சேகாவத் “ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன் 2019” விருதுகளை தர வரிசையில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வழங்கினார்.
  • உலகக் கழிவறை தினத்தை முன்னிட்டு (நவம்பர் 19) பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
  • இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இத்தரவரிசைப் பட்டியலில் உள்ளன.
  • இந்திய மாவட்டங்களில் தெலுங்கானாவில் உள்ள பெடப்பள்ளி மாவட்டம் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து  ஃபரிதாபாத் (ஹரியானா) மற்றும் ரேவாரி (ஹரியானா) மாவட்டங்களும் விருதுகளைப் பெற்றன.
  • உத்தரப் பிரதேசம் அதிகபட்ச பங்களிப்பைக் கொண்ட மாநிலமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்